Paristamil Navigation Paristamil advert login
உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல்: முதலிடத்தில் மோடி

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல்: முதலிடத்தில் மோடி

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல்:  முதலிடத்தில்  மோடி

9 மார்கழி 2023 சனி 08:36 | பார்வைகள் : 903


அமெரிக்காவின்  ‛‛மார்னிங் கன்சல்ட்  நிறுவனம் நடத்திய உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர்  மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந் நிறுவனம் கடந்த நவம்பர் 29-ம் தேதி முதல் டிச.05ம் தேதி வரைஆராய்ச்சி அமைப்புடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் பிரதமர் மோடி 76 சதவீதம் பேரின் ஆதரவை பெற்றுபிரபல தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். 

18 சதவீதத்தினர் மோடியை ஆதரிக்கவில்லை.  6 சதவீதத்தினர் எந்தகருத்தும் தெரிவிக்கவில்லை.

தொடர்ந்து   மக்கள் ஆதரவு பெற்றுள்ள உலகதலைவர்கள் விவரம்:

* மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவெல் லோபெஸ் ஓப்ரடோ 66 சதவீதம் ஆதரவுடன்  2-வது இடம் பிடித்துள்ளார். 

* சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட் 58 சதவீத ஆதரவுடன்  3-வது இடத்தில்  உள்ளார்.  

* அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 37 சதவீத  ஆதரவு பெற்றுள்ளார்.

* கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  31 சதவீதம் ஆதரவு பெற்றுள்ளார்..

* பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் 25 சதவீத  ஆதரவு பெற்றுள்ளார். 

* பிரான்ஸ் அதிபரான இம்மானுவேல் மேக்ரான் 24 சதவீத   ஆதரவு பெற்றுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்