Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

1 ஐப்பசி 2023 ஞாயிறு 10:28| பார்வைகள் : 1157


என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த திரைப்படம் 'இறைவன்'. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . 

கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படம் வெளியானது விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் மோசமான வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இப்படத்தில் 14 நிமிட காட்சிகளை நீக்கி நேற்று மாலை காட்சி முதல் தமிழகம் முழுவதும் இறைவன் திரையிட்ட திரையரங்குகளில் இந்த மாற்றத்தை செய்தனர் படக்குழுவினர்.