Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

 சுவிட்ஸர்லாந்திலிருந்து இலங்கை சென்ற வவுனியா இளைஞனின் விபரீத முடிவு

 சுவிட்ஸர்லாந்திலிருந்து இலங்கை சென்ற வவுனியா இளைஞனின் விபரீத முடிவு

21 புரட்டாசி 2023 வியாழன் 10:35| பார்வைகள் : 2138


வவுனியா - தோணிக்கல் பகுதியில் கழுத்தில் சுருக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 
 
இன்று காலை குறித்த நபரின் வீட்டிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். 
 
27 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சிறிதரன் அரவிந்தன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
 
குறித்த இளைஞர் சுவிஸ்லாந்திலிருந்து விடுமுறையில் இலங்கைகு வருகை தந்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.