Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

 உக்ரைன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கான சந்திப்பு

 உக்ரைன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கான சந்திப்பு

22 புரட்டாசி 2023 வெள்ளி 10:02| பார்வைகள் : 1433


உக்ரைன் ரஷ்யா இடையிலான போரானது முடிவுக்கு வராமல் இடம் பெற்று வருகின்றது.

இந்நிலையில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை நேரில் சந்தித்து உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை சந்தித்த பிறகு, உக்ரைனுக்கு புதிய உதவி தொகுப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய உதவி தொகுப்பில் உக்ரைனின் வான் பாதுகாப்பு துறைக்கு தேவையான உதவிகளை முக்கியப்படுத்தியுள்ளது. 

வான் பாதுகாப்பு அமைப்புக்கு தேவையான வெடிமருந்துகள் சுமார் 325 மில்லியன் டொலர் மதிப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

மேலும் உக்ரைனுக்கு ஆப்ராம்ஸ் டாங்கிகளை அனுப்பவும், HIMARS-க்கு தேவையான வெடிமருந்துகள், கிளஸ்டர் வெடிப்பொருள்கள், தொட்டி எதிர்ப்பு அமைப்புகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பனிக்காலத்தில் அமெரிக்கா மேலும் உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த ஊக்கப்படுத்தும் என தெரிவித்தார்.

-----