Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

'சந்திரமுகி 3' படத்தில் நடிக்ப்போவது ரஜினியா? ராகவா லாரன்ஸா?

'சந்திரமுகி 3'  படத்தில் நடிக்ப்போவது  ரஜினியா? ராகவா லாரன்ஸா?

26 புரட்டாசி 2023 செவ்வாய் 13:42| பார்வைகள் : 419


’சந்திரமுகி 2’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெற்று விட்டால் ’சந்திரமுகி 3’ திரைப்படம் உருவாக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. மேலும் ’சந்திரமுகி 3’ படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து இயக்குனர் பி வாசு தரப்பிலிருந்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகாவிட்டாலும் ’சந்திரமுகி 2’ எதிர்பார்த்த வெற்றி பெற்றால் கண்டிப்பாக ’சந்திரமுகி 3’ உருவாகும் என்றும் அந்த படத்தின் ஸ்கிரிப்ட் ரஜினிக்கு பிடித்திருந்தால் அவர் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே ‘சந்திரமுகி 2’ வெற்றியில் தான் ‘சந்திரமுகி 3’ படம் உருவாகுமா? என்பது தெரியவரும். மேலும் அதில் ரஜினி நடிப்பாரா? அல்லது ராகவா லாரன்ஸ் நடிப்பாரா? அல்லது இருவரும் இணைந்து நடிப்பார்களா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.