ஹாட்ரிக் கோல் அடித்த ஹாரி கேன்- தரைமட்டமான எதிரணி
17 வைகாசி 2026 ஞாயிறு 17:41 | பார்வைகள் : 1166
Koln அணிக்கு எதிரான பண்டஸ்லிகா போட்டியில் பாயெர்ன் முனிச் அபார வெற்றி பெற்றது.
பாயெர்ன் முனிச் மற்றும் Koln அணிகளுக்கு இடையிலான பண்டஸ்லிகா தொடர் போட்டி Allianz Arena மைதானத்தில் நடந்தது.
ஆட்டத்தின் 9வது நிமிடத்திலேயே ஹாரி கேன் அபார கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து அடுத்த 3 நிமிடங்களிலேயே (12வது நிமிடம்) ஹாரி கேன் பெனால்டி வாய்ப்பில் மிரட்டலாக கோல் அடித்தார்.
பின்னர் 17வது நிமிடத்தில் Koln அணி வீரர் Said El Mala, பாதி மைதானத்தில் இருந்து தனியாளாக பந்தை கொண்டு சென்று கோல் அடித்து மிரட்டினார்.
அடுத்த 4 நிமிடங்களில் பாயெர்ன் வீரர் டாம் பிஸ்சோஃப் கோல் அடிக்க, முதல் பாதியில் பாயெர்ன் அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியில் பாயெர்ன் முனிச் வீரர்களின் சில கோல்கள் தவறிப்போயின. எனினும், நட்சத்திர வீரர் ஹாரி கேன் (Harry Kane) 68வது நிமிடத்தில் மிரட்டலான கோல் அடித்தார்.
82வது நிமிடத்தில் நிக்கோலஸ் ஜேக்ஸன் மூலம் பாயெர்ன் அணிக்கு 5வது கோல் கிடைத்தது. இறுதியில் பாயெர்ன் முனிச் 5-1 என்ற கணக்கில் Koln அணியை வீழ்த்த அபார வெற்றி பெற்றது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan