ஓமன் அருகே இந்திய சரக்கு கப்பலை குறிவைத்து தாக்குதல்; மத்திய அரசு கடும் கண்டனம்
15 வைகாசி 2026 வெள்ளி 04:51 | பார்வைகள் : 1123
குஜராத்தைச் சேர்ந்த 'ஹாஜி அலி' என்ற சரக்குக் கப்பல் மீது ஓமன் அருகே குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேற்று ஓமன் கடற்கரைக்கு அப்பால் இந்திய கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும், வர்த்தகக் கப்பல்களும், மாலுமிகளும் தொடர்ந்து குறிவைக்கப்படுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கப்பலில் இருந்த அனைத்து இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை மீட்ட ஓமன் அதிகாரிகளுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.வர்த்தகக் கப்பல்களைக் குறிவைப்பதையும், மாலுமிகளுக்கு ஆபத்தை விளைவிப்பதையும், அல்லது கப்பல் மூலம் வர்த்தகம் செய்யப்படுவதற்கு இடையூறு விளைவிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான்-அமெரிக்கா இடையேயான மோதல் காரணமாக பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan