அதிமுக.,வில் குழப்பம்: அமித் ஷாவிடம் பேசிய பழனிசாமி
14 வைகாசி 2026 வியாழன் 14:38 | பார்வைகள் : 1362
அ.தி.மு.க.,வில் ஏற்பட்டு உள்ள குழப்பங்கள் தொடர்பாக, அமித் ஷாவிடம் பழனிசாமி பேசி உள்ளார்.
பழனிசாமி ஆதரவு நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
அமித் ஷா வை பழனிசாமி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது 'த.வெ.க.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், விஜய் என்ன செய்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்' என, கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கூறினேன்.
ஆனால், முன்னாள் அமைச்சர்கள் சிலர், 'த.வெ.க.,வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்' என, தெரிவித்தனர். உடன் நான், 'தேசிய ஜனநாயக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளின் தலைமையை சந்தித்து ஆதரவு கேட்க, விஜய் விரும்பவில்லை. அப்படி இருக்கும் போது, எப்படி நாமாக ஆதரவு அளிக்க முடியும்?' என்று, திருப்பி கேட்டேன்.
ஆனால், அவர்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதால், த.வெ.க.,வுக்கு ஆதரவு அளித்து உள்ளனர் என, அமித் ஷாவிடம் பழனிசாமி கூறினார்.
அதற்கு அமித் ஷா, தி.மு.க., போக்கையே த.வெ.க.,வும் பின்பற்றுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என பதிலளித்தார். இவ்வாறு பழனிசாமி ஆதரவு நிர்வாகி கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan