ஜப்பானில் மேலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் அபாயம்
21 சித்திரை 2026 செவ்வாய் 14:00 | பார்வைகள் : 939
ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஒரு வாரத்திற்குள் மேலும் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக ஜப்பான் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சுமார் 170,000 பேருக்கு வெளியேறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நிலநடுக்கத்திற்குப் பின்னர் 3 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் எழலாம் என எச்சரிக்கப்பட்டிருந்தது. எனினும், அதிகபட்சமாக சுமார் 80 சென்டிமீட்டர் உயர அலைகளே பதிவாகியுள்ளதால், பின்னர் எச்சரிக்கை நீக்கப்பட்டது.
புல்லட் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் இயங்கத் தொடங்கின. மேலும், 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், இதுவரை பெரிய அளவிலான உயிரிழப்புகள் அல்லது கட்டமைப்பு சேதங்கள் பதிவாகவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் உலகின் முக்கிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருப்பதால், அங்கு ஏற்படும் நிலநடுக்கங்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. குறிப்பாக, வடபகுதியில் அமைந்துள்ள மின்னணு மற்றும் வாகன உதிரிபாகத் தொழிற்சாலைகளின் உற்பத்தி பாதிக்கப்படலாம் என அச்சம் நிலவுகிறது.
மேலும், 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட 011ஆம் ஆண்டு ஏற்பட்ட புகுஷிமா அணு உலை விபத்தின் வடுக்கள் இன்னும் இருப்பதால், அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளும் மீண்டும் எழுந்துள்ளன.
அடுத்த ஒரு வாரத்திற்குள் 8.0 ரிக்டர் அளவிற்கு சமமான அல்லது அதற்கு மேற்பட்ட நிலநடுக்கம் ஏற்படும் “சாதாரண காலத்தை விட அதிக வாய்ப்பு” இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள நிலநடுக்க வளையப் பகுதியில் அமைந்துள்ள ஜப்பானில் ஆண்டுக்கு சுமார் 1,500 நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. உலகளவில் பதிவாகும் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்களில் சுமார் 10% ஜப்பானில் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan