ஜெயசூரியவின் 18 வருட சாதனையை சமன் செய்த திலக் வர்மா - MI அபார வெற்றி
21 சித்திரை 2026 செவ்வாய் 13:46 | பார்வைகள் : 981
திலக் வர்மாவின் அதிரடி சதத்தால், மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. நாணய சுழற்சியில் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய மும்பை இந்தியன்ஸ், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் குவித்தது.
திலக் வர்மா அதிரடியாக ஆடி 45 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உட்பட 101 ஓட்டங்கள் குவித்தார்.
இதில், முதல் 22 பந்துகளில் வெறும் 19 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து நிதானமாக ஆடி வந்த திலக் வர்மா, அடுத்த 23 பந்துகளில் அதிரடியாக ஆடி 85 ஓட்டங்கள் குவித்தார்.
இது திலக் வர்மாவின் முதல் ஐபிஎல் சதமாகும்.
மேலும், 2008 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சனத் ஜெயசூரிய 45 பந்துகளில் சதம் அடித்ததே, மும்பை இந்தியன்ஸ் வீரரின் அதிவேக சதமாக இருந்தது. நேற்றைய சதத்தின் மூலம், திலக் வர்மா அந்த சாதனையை சமன் செய்துள்ளார்.
அதைத்தொடர்ந்து, 200 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ், 15.5 ஓவர்களிலே அனைத்து விக்கெட்களையும் இழந்து, 100 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
இதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் 6 போட்டிகளில் விளையாடி, 2 வெற்றியுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் போட்டிகளில் விளையாடி, 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan