Paristamil Navigation Paristamil advert login

உக்ரைனை இரவில் குறிவைத்த 143 ரஷ்ய ட்ரோன்கள்- போராடி வீழ்த்திய உக்ரைன்

உக்ரைனை இரவில் குறிவைத்த 143 ரஷ்ய ட்ரோன்கள்- போராடி வீழ்த்திய உக்ரைன்

21 சித்திரை 2026 செவ்வாய் 10:42 | பார்வைகள் : 1055


உக்ரைன் மீது மீண்டும் ஒரு பிரம்மாண்டமான ட்ரோன் தாக்குதலை ரஷ்யா நடத்தியிருப்பது பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

செவ்வாய்க்கிழமை டெலிகிராம் பக்கத்தில் உக்ரைனிய வான் பாதுகாப்பு படை வெளியிட்ட தகவலில், இரவோடு இரவாக ரஷ்ய ராணுவ படை கிட்டத்தட்ட 143 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.

ட்ரோன்களுடன் சேர்த்து 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் ஏவி ரஷ்யா இந்த தாக்குதலை முன்னெடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

ரஷ்யா முன்னெடுத்த இந்த வான்வழித் தாக்குதலில் பெரும்பாலானவற்றை உக்ரைனிய விமானப்படை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி உள்ளது.

நாட்டின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கிட்டத்தட்ட 116 ட்ரோன்கள் மற்றும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

உக்ரைனிய தாக்குதலில் இருந்து தப்பிய 22 ட்ரோன்கள் 17 வெவ்வேறு இடங்களில் தாக்குதலை நடத்தியுள்ளன.

பொதுமக்கள் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பாதுகாப்பு நடைமுறைகளை குடிமக்கள் கடைபிடிக்குமாறு உக்ரைனிய ராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது.