விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கில் நடந்தது என்ன?
19 சித்திரை 2026 ஞாயிறு 17:13 | பார்வைகள் : 1513
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களைத் துல்லியமாகத் தெரிவித்துள்ளார். இதன்படி, அவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.625 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அசையும் சொத்துக்கள் ரூ.404 கோடி மற்றும் அசையாச் சொத்துக்கள் ரூ.220 கோடி எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவர் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான உறவு குறித்து பல்வேறு யூகங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. பரவலாகப் பேசப்படும் தகவல்களின் படி, விஜய் தனது பிரமாண்ட சொத்துக்களைப் பகிரங்கப்படுத்திய நிலையில், அவரிடமிருந்து பிரிந்து வாழ்வதாக கூறப்படும் சங்கீதா, விவாகரத்து தீர்வாக சுமார் 250 கோடி வரை கேட்டதாக ஒரு செய்தி தீயாய்ப் பரவி வருகிறது.
இந்த தொகையானது சங்கீதாவுக்கு மட்டுமல்லாமல், அவர்களின் பிள்ளைகளான ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா ஆகியோரின் எதிர்காலப் பாதுகாப்பிற்காகவும் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.இருப்பினும், இந்த விவகாரத்தில் விஜய் தரப்பு முற்றிலும் மாறுபட்ட ஒரு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அதாவது, மனைவிக்கு மட்டும் சுமார் ரூ.35 கோடி செட்டில்மெண்ட் வழங்க விஜய் சம்மதித்துள்ளதாகவும், பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலச் செலவுகளைத் தானே முன்னின்று கவனித்துக் கொள்வதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
பிள்ளைகள் மீது மிகுந்த பாசம் கொண்ட விஜய், அவர்களைத் தனது அரவணைப்பிலேயே வளர்க்க விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால், இந்தச் செய்திகள் எதற்கும் விஜய் தரப்பிலிருந்தோ அல்லது சங்கீதா தரப்பிலிருந்தோ இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. வேட்புமனுவில் தனது மனைவியின் பெயரில் சுமார் 18 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் பெரும் அளவிலான தங்க நகைகள் இருப்பதாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan