பாரதிராஜாவின் தற்போதைய நிலை – ‘தாய் கிழவி’க்கு சொன்ன வாழ்த்து!
19 சித்திரை 2026 ஞாயிறு 17:04 | பார்வைகள் : 1358
தமிழ் சினிமா ரசிகர்கள் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தில் எடுக்கப்படும் படங்களை அதிகம் ரசித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட திரைப்படமாக மாறியுள்ளது ‘தாய் கிழவி’. இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவான இந்த படம், நகைச்சுவை கலந்த சமூக கருத்தை வலியுறுத்துகிறது.
இதுவரை எந்த படத்திலும் நடித்திராத வகையில், ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல், அவரது மேக்-ஓவரும் மிகவும் இயல்பானதாக அமைந்துள்ளது. 70 வயதான தைரியமான கிழவி கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். மேலும் முத்துக்குமார், முனிஷ்காந்த், ரேச்சல் ரெபேக்கா, இளவரசு, ஜார்ஜ் மரியன், பால சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம், திரையரங்குகளில் சுமார் 80 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை செய்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு கிராமத்து மணம் கமழும் இசையால் வலு சேர்த்துள்ளார் நிவாஸ் கே. பிரசன்னா. திரையரங்குகளில் எந்த அளவுக்கு வரவேற்பு பெற்றதோ, அதே அளவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் வரவேற்பைப் பெற்று ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், ராதிகாவின் குருநாதரான பாரதிராஜா இந்த படத்தை பார்த்து, நடிகை ராதிகாவை வாழ்த்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக் குறைவு காரணமாக இருந்துவரும் பாரதிராஜா, தன் மகன் மறைவுக்குப் பின்னர் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். அவ்வப்போது இவரது உடல்நிலை குறித்து வதந்திகளும் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், பாரதிராஜா மிகவும் மெலிந்த நிலையில் காணப்படுகிறார். ‘தாய் கிழவி’ படத்தை பார்த்தீர்களா என ராதிகா கேட்க, அவர் பார்த்ததாக கூறி, “இந்த படத்திற்காக உனக்கு தேசிய விருது கிடைக்கும்” என்று வாழ்த்தியுள்ளார். குரு–சிஷ்யை இடையேயான அழகிய உணர்வுப்பூர்வமான உறவை இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், எப்போதும் கம்பீரமாக காணப்படும் பாரதிராஜாவின் இந்த நிலை ரசிகர்களை கண்கலங்க வைக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan