100வது போட்டியில் RCB அதிர்ச்சி தோல்வி - கேப்டன் கூறிய காரணம்
19 சித்திரை 2026 ஞாயிறு 13:44 | பார்வைகள் : 1107
எங்கு தவறுகள் செய்தோம் என்று தீவிரமாக ஆராய்ந்து சரிசெய்வோம் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணித்தலைவர் பட்டிதார் தெரிவித்தார்.
டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய போட்டி சின்னசாமி மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய பெங்களூரு அணி 175 ஓட்டங்கள் எடுத்தது. பிலிப் சால்ட் 63 ஓட்டங்கள் விளாசினார். பின்னர் ஆடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் கே.எல்.ராகுல் 57 (34) ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார்.
ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர் அதிரடியில் மிரட்டினர். கடைசி 3 ஓவர்களில் 37 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஸ்டப்ஸ் சிக்ஸர், பவுண்டரிகளை விரட்டினார்.
20வது ஓவரில் 15 ஓட்டங்கள் தேவைப்பட, மில்லர் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாச டெல்லி வெற்றி பெற்றது.
தோல்வி குறித்து பேசிய RCB அணித்தலைவர் ரஜத் பட்டிதார், "மிகவும் நெருக்கமான போட்டியாக அமைந்தது, இருப்பினும், நாங்கள் 15 முதல் 20 ஓட்டங்கள் வரை குறைவாகவே எடுத்திருந்தோம் என்று நான் உணர்கிறேன். இது ஒரு நீண்ட தொடர், எனவே, நாங்கள் மீண்டும் சென்று, எங்கு தவறுகள் செய்தோம் என்பதை தீவிரமாக ஆராய்ந்து அவற்றை நிச்சயம் சரிசெய்துகொள்வோம்" என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan