பிரித்தானியாவில் வீட்டிலிருந்து போதைப்பொருள் விற்பனை செய்த தம்பதி
17 சித்திரை 2026 வெள்ளி 14:00 | பார்வைகள் : 1429
இங்கிலாந்தில் வீட்டில் வைத்து போதைப்பொருள் விற்று வந்த கணவன், மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் டோர்செட் மாகாணத்தின் விம்போர்ன் நகரைச் சேர்ந்த தம்பதியினர் புரூக் மார்ஷல் (35), கிராண்ட் புட்மேன் (33). இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இவர்களது வீட்டில் இருந்து தென்மேற்கு பிராந்திய குற்றப் பிரிவின் துப்பறிவாளர்கள், மூன்று படுக்கையறை வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது சமையலறை அலமாரியில் கொக்கைன் பைகள், பணக்கட்டுகள் கண்டெடுக்கப்பட்டது. சமையலறை மேடை முழுவதும் வெள்ளை நிறப் பொடி சிதறிக் கிடந்ததுடன், ஒரு கிலோகிராம் கொக்கைன் கட்டியைக் கொண்ட ஒரு வாளியும் காணப்பட்டது.
மொத்தமாக 1.5 கிலோ கொக்கைன், 30000 பவுண்ட் மதிப்புள்ள ஹெராயின், 20000 பவுண்ட் மதிப்புள்ள கஞ்சா மற்றும் 2000 மதிப்புள்ள Ketamine ஆகிய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் நடந்த விசாரணையில், வெளித்தோற்றத்தில் மரியாதைக்குரிய தம்பதியினராக தெரிந்த புரூக் மற்றும் கிராண்ட், தங்களது வீட்டில் இருந்து 'போதைப்பொருள் பல்பொருள் அங்காடி' நடத்தியது தெரிய வந்தது.
இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தம்பதியினருக்கு மொத்தமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan