இலங்கையில் புத்தாண்டு காலத்தில் 42 வீதி விபத்துக்கள் – 44 உயிரிழப்புகள்!
16 சித்திரை 2026 வியாழன் 19:28 | பார்வைகள் : 1039
2026 ஏப்ரல் 10 முதல் 15 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 42 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன.
இதன் விளைவாக 44 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு தினங்களான ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் 19 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும், அதன் விளைவாக 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனதீர குறிப்பிட்டார்.
வாகன வகைகளின் அடிப்படையில் விபத்துக்களைப் பகுப்பாய்வு செய்ததில், அதிகபட்சமாக 16 மோட்டார் சைக்கிள் விபத்துக்களும், அதைத் தொடர்ந்து 4 முச்சக்கர வண்டி விபத்துக்களும், 2 வேன்கள், 2 கார்கள், 2 வாடகைக் கார்கள் மற்றும் 2 துவிச்சக்கர வண்டி விபத்துக்களும் பதிவாகியுள்ளன.
இந்த விபத்துகளுக்கு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதே முக்கியக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan