டி 20 தொடரில் இருந்து விலகிய முக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்
16 சித்திரை 2026 வியாழன் 15:26 | பார்வைகள் : 997
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் கலீல் அகமது ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது தொடைத் தசை காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.
ஏப்ரல் 14ம் திகதி KKR அணியுடன் நடைபெற்ற போட்டியின் போது கலீல் அகமது தனது வலது இடுப்பு பகுதியில் வலி ஏற்பட்டதாக தெரிவித்து போட்டியின் நடுவே களத்திலிருந்து வெளியேறினார்.
இதையடுத்து வெளியான தகவலின் அடிப்படையில், கிரேடு 2 தசை கிழிவு ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கான சிகிச்சைக்கு 10 முதல் 12 வாரங்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை அணியால் சுமார் 4.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இந்த தொடரில் ஆரம்பத்தில் இருந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்த கலீல் அகமது தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.
ஏற்கனவே CSK வீரர் நேதன் எல்லிஸ் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan