பழனிசாமியை சந்தித்த தலித் அமைப்புகள்; உளவுத்துறை திடீர் விசாரணை
16 சித்திரை 2026 வியாழன் 11:09 | பார்வைகள் : 849
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்த பட்டியலின அமைப்புகளின் நிர்வாகிகள் வீடுகளுக்குச் சென்று, தமிழக உளவுத் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
எழுத்தாளர் ஷாலின் மரிய லாரன்ஸ் தலைமையில், தலித் அறிவுசார் குழுமத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் லட்சுமணன், ராமஜெயம், எழுத்தாளர் அருள் முத்துகுமரன், தகவல் உரிமை செயற்பாட்டாளர் கார்த்திக், அறிவு சமூகம் அமைப்பின் நிறுவனர் தமிழ்முதல்வன், வணங்காமுடி பதிப்பக நிறுவனர் தமிழ்முரசு, தமிழ்நாடு பறையர் பேரவையைச் சேர்ந்த பேராசிரியர் கதிரவன் ஆகியோர், பழனிசாமியை சமீபத்தில் சந்தித்து, வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், இவர்களின் வீடுகளுக்குச் சென்று, தமிழக உளவுத் துறையினர், 'பழனிசாமியை எதற்காக சந்தித்தீர்கள்; இதற்கு யார் ஏற்பாடு செய்தது என, அச்சுறுத்தும் வகையில் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டதாக, பட்டியலின அமைப்புகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, எழுத்தாளர் ஷாலின் மரிய லாரன்ஸ் வெளியிட்ட பதிவில், 'பழனிசாமியை நாங்கள் சந்தித்து வந்த பின், மறுநாளே பட்டியல் சமூக செயற்பாட்டாளர்கள் இல்லத்திற்கு சென்று, தமிழக உளவுத் துறை விசாரித்துள்ளது.
இது, அ.தி.மு.க.,வை ஆதரிப்போரை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. உளவுத் துறை ஐ.ஜி., செந்தில்வேலன் இன்னும் மாற்றப்படாமல் இருப்பதே இதற்கு காரணம் என கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan