கர படம் எப்படியிருக்கு ?
15 சித்திரை 2026 புதன் 16:18 | பார்வைகள் : 1116
அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‘போர் தொழில்’. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் விக்னேஷ் ராஜா. இவரது இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘கர’.
தனுஷ் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் மமிதா பைஜூ அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் கருணாஸ், லால், சுராஜ் வெஞ்சரமுடு, ஜெயராம், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
படம் வரும் ஏப்ரல் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட பாதிப்பு நம் ஊரை எப்படி தாக்குகிறது என்பது தான் படத்தின் ஒன்லைன் என இயக்குநர் கூறியிருந்தார். இதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் தனுஷ் ‘கர’ திரைப்படத்தை பார்த்துள்ளார். இதையடுத்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விக்னேஷ் ராஜா நீங்கள் ஒரு ஜீனியஸ். ‘கர’ படத்தை கொடுத்ததற்காக நன்றி” என பாராட்டி பதிவிட்டுள்ளார். இதன் மூலம் ரசிகர்களிடையே படத்துக்கு ஹைப் இன்னும் அதிகரித்துள்ளது.
.
மேலும், படத்தை பார்த்து இயக்குநர் விக்னேஷ் ராஜாவை நேரிலும் தனுஷ் பாராட்டியதாக கூறப்படுகிறது. தனுஷின் கடந்த கால திரைப்படங்கள் பொறுத்தவரை, ‘ராயன்’ திரைப்படம் திரையரங்குகளில் வரவேற்பை பெற்றது. ஆனால், ஓடிடியில் எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டது. ‘குபேரா’ படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார் தனுஷ். ஆனால் அந்தப் படமும் தமிழ்நாட்டில் ஓடவில்லை. ‘இட்லி கடை’ சொதப்பியதால், அடுத்து ‘கர’ படம் அவருக்கு வெற்றியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan