கனடா தேர்தல்-மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி
15 சித்திரை 2026 புதன் 04:51 | பார்வைகள் : 1189
கனடாவில் நடைபெற்ற தேர்தல்களில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
கனடாவின் ரொரன்றோவில் இரண்டு தொகுதிகளிலும், மொன்றியலில் ஒரு தொகுதியிலும் நேற்று இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.
விடயம் என்னெவென்றால், இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும். அதாவது, கனடா நாடாளுமன்றத்தின் கீழவையில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக இருக்கவேண்டுமானால், அக்கட்சிக்கு 172 இருக்கைகள் இருக்கவேண்டும்.
மார்க் கார்னியின் லிபரல் கட்சியிடம் 171 இருக்கைகள்தான் இருந்தன.
விடயம் என்னவென்றால், நாடாளுமன்றத்தில், ஏதாவது ஒரு வாக்கெடுப்பில் இரண்டு பிரிவினரும் ஒரே அளவில் வாக்களித்தால், கூடுதல் ஒரு வாக்குக்காக, சபாநாயகரின் உதவியை ஆளும் கட்சி நாடவேண்டியிருக்கும். ஆக, ஆளும் லிபரல் கட்சிக்கு 173 அல்லது 174 இருக்கைகள் கிடைத்துவிட்டால், யாருடைய உதவியையும் நாடாமலே மசோதாக்களை நிறைவேற்ற முடியும்.
அதனால்தான், இந்த இடைத்தேர்தல் கனடா அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில், மார்க் கார்னியின் லிபரல் கட்சி, தேர்தல் நடைபெற்ற மூன்று தொகுதிகளிலுமே வெற்றி பெற்றுள்ளது.
ஆக, ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலே பெரும்பான்மை கிடைத்துவிடும் என்றிருந்த நிலையில், தற்போது மூன்று தொகுதிகளிலுமே வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது மார்க் கார்னியின் லிபரல் கட்சி.
விடயம் என்னவென்றால், கனடா அரசியல் வரலாற்றில் 24 பிரதமர்கள் நாட்டை ஆண்டுள்ளார்கள்.
அவர்களில் இதுவரை 13 பேருக்குத்தான் பெரும்பான்மை கிடைத்திருந்த நிலையில், தற்போது மார்க் கார்னி கனடாவின் பெரும்பான்மை பெற்ற 14ஆவது பிரதமராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan