ரஜினி படத்திலிருந்து இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி விலக காரணம் யார்?
14 சித்திரை 2026 செவ்வாய் 16:29 | பார்வைகள் : 1292
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்திலிருந்து இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி விலகியது நேற்றிலிருந்து பரபரப்பாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே சுந்தர்.சி விலகிய நிலையில் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தியும் விலகியது பேசு பொருளாக மாறியிருக்கிறது.
இந்நிலையில்தான், இதற்கு பின்னணியில் சில காரணங்கள் சொல்லப்படுகிறது. தொடர்ந்து வன்முறை காட்சிகள் கொண்ட ஆக்சன் படங்களில் மட்டுமே நடித்த வந்ததாலும், கூலி படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்பதாலும், அடுத்து ஒரு குடும்ப பின்னணி கொண்ட காமெடி கதையில் நடிக்கலாம் என்று ரஜினி முடிவெடுத்தார். அதனால்தான் சிபி சக்ரவர்த்தி சொன்ன கதையில் நடிக்க அவர் சம்மதித்தார்.
தற்போது சிபி சக்கரவர்த்தி முழுக்கதையையும் எழுதி முடித்து விட்டார். இந்நிலையில்தான் சமீபத்தில் அவரை அழைத்த ரஜினி ’துரந்தர் 2 படம் பார்த்தேன்.. அதுபோல கதையை மாற்றங்கள்’ என சொல்ல அதிர்ச்சியடைந்த சிபி சக்கரவர்த்தி இந்த படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது..
மற்றொரு பக்கம் தெலுங்கில் ஞானியை வைத்து ஒரு புதிய படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்குவது முடிவானது. ஆனால் சில காரணங்களால் அந்த படத்திலிருந்து சிபி சக்ரவர்த்தி வெளியேறி விட்டார். தற்போது அந்த தயாரிப்பாளர் ‘இந்த படத்திற்காக இவ்வளவு செலவுகள் செய்திருக்கிறோம்.. எனவே ரஜினி படத்தில் எங்களையும் ஒரு தயாரிப்பாளராக சேர்க்க சொல்லுங்கள்’ என சிபி சக்ரவர்த்திக்கு அழுத்தம் கொடுத்தாராம். ஆனால் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இதற்கு சம்மதிக்கவில்லை. இதனால்தான் சிபி சக்கரவர்த்தி இந்த படத்திலிருந்து வெளியேறியதாகவும் சொல்லப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan