சர்வாதிகார போக்கை கைவிட்டால் மட்டுமே அமெரிக்காவுடன் உடன்பாடு – ஈரான் ஜனாதிபதி உறுதி!
14 சித்திரை 2026 செவ்வாய் 15:17 | பார்வைகள் : 1207
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
ஈரான் அணு ஆயுத திட்டத்தை கைவிட மறுப்பதே பேச்சுவார்த்தை தோல்விக்கான முக்கிய காரணம் என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் “ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும் அதைப் பற்றி கவலைப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன், அமெரிக்கா தனது சர்வாதிகார போக்கை கைவிட்டால் மட்டுமே உடன்பாட்டுக்கான வாய்ப்பு உருவாகும் எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், “ஈரான் நாட்டின் உரிமைகளை அமெரிக்கா மதித்தால், உடன்பாட்டை எட்டுவது சாத்தியம்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி,
போரை முடிவுக்கு கொண்டு வர நாங்கள் நேர்மையாக பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அமெரிக்கா அந்த முயற்சிகளை சீர்குலைத்தது” என்று குற்றம்சாட்டினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan