Basic-Fit உறுப்பினர்களின் தரவுகள் கசிவு: பிரான்ஸ் உட்பட பல நாடுகள் பாதிப்பு!!
13 சித்திரை 2026 திங்கள் 16:41 | பார்வைகள் : 2209
Basic-Fit நிறுவனம் பல நாடுகளில், குறிப்பாக France உட்பட, தனது உறுப்பினர்களின் தனிப்பட்ட தரவுகள் கசிந்துள்ளதாக அறிவித்துள்ளது. ஹேக்கர்கள் பெயர், முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண், பிறந்த தேதி மற்றும் வங்கி தொடர்பான தகவல்கள் போன்ற சந்தா விவரங்களைப் பெற்றுள்ளனர்.
நிறுவனம், உறுப்பினர்கள் கிளப்புகளில் வருகை பதிவுகளை சேமிக்கும் அமைப்பில் அனுமதியற்ற அணுகல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், எந்த கடவுச்சொற்களும் திருடப்படவில்லை என்றும், அடையாள ஆவணங்கள் சேமிக்கப்படவில்லை என்றும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இந்த தரவு கசிவு Belgique, Allemagne, Espagne, Luxembourg மற்றும் Pays-Bas உள்ளிட்ட நாடுகளில் சுமார் ஒரு மில்லியன் உறுப்பினர்களை பாதித்துள்ளது. குறிப்பாக Pays-Bas-இல் 200,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; Basic-Fit தற்போது 12 நாடுகளில் 5.8 மில்லியன் உறுப்பினர்களுடன் செயல்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan