30 ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருளுடன் இலங்கை வந்தடைந்த கப்பல்
13 சித்திரை 2026 திங்கள் 15:45 | பார்வைகள் : 1062
மின்சார உற்பத்திக்கு வலுசேர்க்கும் வகையில், 30 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளுடன் கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது.
மின்சார உற்பத்திக்குத் தேவையான பேர்னஸ் எண்ணெயை ஏற்றிய இந்தக் கப்பல், நேற்று 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
கப்பலில் கொண்டுவரப்பட்ட எரிபொருளை, கொலன்னாவ எண்ணெய் களஞ்சிய முனையத்திற்கு விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த எரிபொருள் வருகை, நாட்டின் மின்சார உற்பத்தி நடவடிக்கைகளுக்கு முக்கிய ஆதாரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan