கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டு பெண்
12 சித்திரை 2026 ஞாயிறு 19:01 | பார்வைகள் : 1054
தனது உடலில் மறைத்து கொக்கெய்ன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் உகண்டாவின் கம்பாலா நகரைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கத்தார் நாட்டின் தோஹாவிலிருந்து QR-664 என்ற வானூர்தி மூலம் இன்று காலை 9.30 மணியளவில் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில், அப்பெண்ணின் உடலில் 21 மாத்திரைகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 274 கிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டது.
இதன் பெறுமதி சுமார் ஒரு கோடியே 23 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மேலும் சில போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அவர் மேலதிக மருத்துவ சிகிச்சை மற்றும் விசாரணைகளுக்காக கட்டுநாயக்க வானூர்தி நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan