2026-ல் மடிக்கக்கூடிய iPhone-ஐ அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டம்
12 சித்திரை 2026 ஞாயிறு 14:21 | பார்வைகள் : 1162
ஆப்பிள் நிறுவனம், 2026-இல் தனது முதல் மடிக்கக்கூடிய iPhone-ஐ வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
Foxconn நிறுவனம் சோதனை உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த சாதனத்தைப் பற்றிய ஊகங்கள் இருந்தாலும், 2026-ம் ஆண்டு ஆப்பிள் தனது 50வது ஆண்டு விழாவுடன் இணைந்து இந்த புதிய iPhone-ஐ அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள், மதிக்கக்கூடிய திரையில் சுருக்கம் (crease) தெரியாமல் இருக்க ஹிஞ்ச் (hinge) தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக லிக்விட் மெட்டல் மற்றும் டைட்டானியம் அலாய் போன்ற மேம்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி வருகிறது.
மடிக்கக்கூடிய போன்கள் சந்தையில் இன்னும் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதால், ஆப்பிள் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறது.
அதிக விலை மற்றும் நீடித்த தன்மை குறித்த சந்தேகங்கள் காரணமாக, foldable போன்கள் பொதுமக்களிடையே மெதுவாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னோட்ட வடிவமைப்புகள் படி, புதிய iPhone “book-style” வடிவில் இருக்கும். இதில் 7.8 அங்குல முதன்மை திரை மற்றும் 5.5 அங்குல வெளிப்புற திரை இருக்கும். A20 Pro சிப் செட் மூலம் அதிக செயல்திறன் வழங்கப்படும். விலை 2000 முதல் 2400 அமெரிக்க டொலர் வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
இந்த மடிக்கக்கூடிய iPhone, multitasking மற்றும் split-screen பயன்பாடுகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan