இஸ்ரேலின் சதித் திட்டம் - கத்தார் முன்னாள் பிரதமர் பகீர் எச்சரிக்கை
12 வைகாசி 2026 செவ்வாய் 16:41 | பார்வைகள் : 1547
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது போர் தாக்குதலை மேற்கொண்ட நிலையில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கா தளங்களின் மீது தாக்குதலை ஈரான் மேற்கொண்டது.
இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருகின்றது.
மத்திய கிழக்கில் தற்போது நிகழும் போர் என்பது தற்செயலானது அல்ல.
அது வன்முறை மூலம் ஒட்டுமொத்த பிராந்தியத்தையுமே மாற்றி அமைப்பதற்கான இஸ்ரேலின் நீண்டகால சதித்திட்டம் என்று கத்தாரின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹமத் பின் ஜாசிம் அல் தானி தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில், தற்போதைய புவிசார் அரசியல் மாற்றங்கள் குறித்து அவர் மிகக் கடுமையான எச்சரிக்கைகளை முன்வைத்தார்.
குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியே இந்தப் போரின் மிக மோசமான விளைவு என்று குறிப்பிட்ட அவர், நெதன்யாகுவின் "பெரிய இஸ்ரேல்" கனவு பிராந்திய அமைதிக்கே உலை வைக்கும் எனச் சாடினார்.
இந்த பேராபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள வளைகுடா நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து உடனடியாக ஒரு 'கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை' உருவாக்க வேண்டியது கட்டாயம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan