கடைசி நாளில் 268 ரன் இலக்கு - பாகிஸ்தானுக்கு செக் வைத்த வங்காளதேசம்
12 வைகாசி 2026 செவ்வாய் 11:00 | பார்வைகள் : 1452
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்காளதேச அணி 268 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.
வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டாக்காவில் நடந்து வருகிறது.
வங்காளதேசம் முதல் இன்னிங்ஸில் 413 ஓட்டங்களும், பாகிஸ்தான் 386 ஓட்டங்களும் குவித்தன. பின்னர் வங்காளதேச அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, மொமினுள் ஹக் மற்றும் நஜ்முல் ஷாண்டோ வலுவான கூட்டணி அமைத்தனர்.
அரைசதம் கடந்த மொமினுள் ஹக் 56 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த ரஹிம் 22 ஓட்டங்களிலும், தாஸ் 11 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அணித்தலைவர் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (Najmul Hossain Shanto) 87 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
மெஹிதி ஹசன் அதிரடியாக 24 ஓட்டங்கள் எடுக்க, வங்காளதேச அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. நோமன் அலி, ஹசன் அலி தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
அதன் பின்னர் கடைசி நாளான இன்று 268 ஓட்டங்கள் இலக்கினை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.
உணவு இடைவேளை முன்புவரை பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 6 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan