ஈரான் மீதான பொருளாதார அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தும் அமெரிக்கா
12 வைகாசி 2026 செவ்வாய் 10:13 | பார்வைகள் : 1493
ஈரான் அணு ஆயுத உற்பத்தியை மேற்கொள்ளவதை கண்டித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தாக்குதலை மேற்கொண்டது.
இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் இடம்பெற்று வரும் நிலையில் ஈரான் மீதான பொருளாதார அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா புதிய சுற்று பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இந்த தடைகள் ஈரான் அரசாங்கத்துடன் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை இலக்கு வைத்துள்ளதாக அமெரிக்க நிதித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த புதிய உத்தரவின் மூலம் மூன்று தனிநபர்கள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய நிறுவனங்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மொத்தம் ஒன்பது நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இவற்றில் சில நிறுவனங்கள் ஹொங்கொங்கை தளமாகக் கொண்டு இயங்குபவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் வருமான வழிகளை முடக்குவதும், சர்வதேச நிதிச் சந்தைகளில் இருந்து அந்த நாட்டைத் தனிமைப்படுத்துவதும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.
அமெரிக்க நிதித்துறை அமைச்சின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தகவல், ஈரானுடனான அமெரிக்காவின் நீண்டகால மோதல் போக்கை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, ஈரானின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் மீது அமெரிக்கா தனது பிடியை இறுக்கி வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan