டெக்சாஸின் லாரெடோவில் சரக்கு ரயிலில் இருந்து 6 பேர் சடலங்கள்
12 வைகாசி 2026 செவ்வாய் 08:30 | பார்வைகள் : 1205
டெக்சாஸின் லாரெடோவில் சரக்கு ரயிலில் இருந்து 6 பேர் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே தினமும் லட்சக்கணக்கான டன் சரக்குகள் ரயில்கள் மூலம் கடத்தப்படுகின்றன.
மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சிக்கும் பலர், சரக்கு ரயில்களின் மேலேயோ அல்லது உள்ளேயோ ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.
இதனால் அவ்வப்போது உயிரிழப்பு சம்பவங்களும் நிகழந்து வருகிறது.
அமெரிக்கா மெக்சிகோ எல்லை அருகே டெக்சாஸின் லாரெடோவில் சரக்கு ரயில் பெட்டியில் இருந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும்பாலும் கடுமையான வெப்பம், காற்றோட்டமின்மை மற்றும் ரயிலில் ஆபத்தான முறையில் ஏறி பயணம் செய்யும் போது ஏற்படும் விபத்துகளால் நடக்கின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயிலுக்குள் 6 பேர் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர். ஆனால் உயிரிழந்தவர்கள் விவரங்களை வெளியிட மறுத்துவிட்டனர்.
இந்த சம்பவத்திற்கான காரணம், சடலங்கள் எவ்வளவு நேரம் ரயிலுக்குள் இருந்துள்ளது. சதி செயல் காரணமாக நிகழ்ந்ததா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
தெற்கு டெக்சாஸில் கடும் வெப்பம் நிலவி வரும் சூழலில், இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. வெப்பத் தாக்கம் மரணங்களுக்குக் காரணமா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan