பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்திற்கு இடையேயான தங்கக் கடத்தல் வழக்கில் மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது!!
11 வைகாசி 2026 திங்கள் 14:47 | பார்வைகள் : 3598
France மற்றும் Belgium இடையிலான தங்கக் கடத்தல் வழக்கில் மேலும் ஐந்து புதிய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த கடத்தல் வலையமைப்பை குறித்து ஜெந்தாம்கள் காவல்துறையினர் 2024 முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜனவரியில் ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். மேலும் இந்த ஐந்து பேரும் “திருட்டு மற்றும் பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள்” எனக் கூறப்படுகிறது. அவர்கள் மே 5 செவ்வாய்க்கிழமை Vaucluse, Hérault மற்றும் Gard பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறையினர் ஆடம்பர தோல் பொருட்கள், கடிகாரங்கள், உயர்தர ஆபரண உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், வங்கிக் கணக்குகள் மற்றும் கிரிப்டோ சொத்துகளில் இருந்த 100,000 யூரோக்களுக்கும் அதிகமான தொகையும் கைப்பற்றப்பட்டது. ஆயுதங்கள் மற்றும் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
குற்றவாளிகள் செல்வந்தர்களின் வீடுகளில் நடைபெற்ற கொள்ளைகளில் திருடப்பட்ட தங்க நகைகள் சேகரிக்கப்பட்டு, பின்னர் அவை உருக்கப்பட்டு தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு Belgiumக்கு கடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan