தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: புதிய எம்.எல்.ஏ.,க்கள் பதவி ஏற்பு
11 வைகாசி 2026 திங்கள் 08:31 | பார்வைகள் : 1072
தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. புதிய எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்க உள்ளனர்.
சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை பிடித்த தமிழக வெற்றிக் கழகம், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியை பிடித்துள்ளது.
முதல்வராக அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று பதவியேற்றார். அவருடன் ஒன்பது அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். தற்காலிக சபாநாயகராக, சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ., கருப்பையா தேர்வு செய்யப்பட்டார்.
கவர்னர் மாளிகையில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில், கருப்பையாவுக்கு கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் சட்டசபை இன்று கூடுகிறது.
கூட்டத்தில், தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும், தற்காலிக சபாநாயகர் கருப்பையா, பதவி பிரமாணம் செய்து வைப்பார். நாளை சபாநாயகர் தேர்தல் நடக்க உள்ளது.
கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் உத்தரவுப்படி, இதற்கான அறிவிப்பை சட்டசபை செயலர் சீனிவாசன் வெளியிட்டுஉள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan