Charles de Gaulle விமான நிலையம் அருகே பாரிய தீ விபத்து!!
10 வைகாசி 2026 ஞாயிறு 07:30 | பார்வைகள் : 1804
Aéroport Roissy-Charles de Gaulle விமான நிலையத்திற்கு அண்மையில் உள்ள கிடங்கொன்றில் சனிக்கிழமை இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் Val d’Oise பகுதி முழுவதும் கரும் புகை மூட்டம் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு உடனடியாக சுமார் 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சனிக்கிழமை இரவு 11 மணி வரையிலும் மீட்பு மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்ததாக அவசர சேவைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதுவரை உயிரிழப்பு அல்லது காயம் தொடர்பான தகவல்கள் எதுவும் பதிவாகவில்லை.
இந்த தீ விபத்து ஏற்பட்ட காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, Aéroports de Paris நிறுவனம், தீப்பற்றிய கிடங்கு விமான நிலைய செயற்பாடுகளுடன் தொடர்பற்றது என்றும், அது விமான நிலையத்தின் மேற்குப் பகுதியில் அமைந்திருந்ததாகவும் கூறியுள்ளது.
மேலும், இந்தச் சம்பவத்தால் விமானப் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan