பா.ஜ.,வின் அடுத்த இலக்கு தெலுங்கானா!
10 வைகாசி 2026 ஞாயிறு 07:14 | பார்வைகள் : 1183
வடகிழக்கு மாநிலமான அசாமில், ஆட்சியை தக்கவைத்தது பா.ஜ., மேற்கு வங்கத்தில் மம்தாவை தோற்கடித்து சரித்திரம் படைத்துள்ளது.
மேற்கு வங்கத்தை அடுத்து, தெலுங்கானா மீது தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்து விட்டது. 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா சட்டசபையில், பா.ஜ.,விற்கு எட்டு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். 2028 நவம்பரில் இங்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது.
இங்கு, முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி, காங்கிரசிடம் படுதோல்வி அடைந்தது. இப்போது, அந்த கட்சி மக்களிடையே பிரபலமாக இல்லை. போதாக்குறைக்கு, சந்திரசேகர ராவிற்கு எதிராக, அவரது மகள் கவிதா தனிக்கட்சி ஆரம்பித்து விட்டார்.
இந்நிலையில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையி லான காங்., ஆட்சியில் உள்ள ஊழல்கள், நிறைவேற்றாத வாக்குறுதிகள் என, பா.ஜ., களத்தில் இறங்கி உள்ளது. தற்போது, மத்திய உள்துறை இணை அமைச்சராக இருப்பவர், தெலுங்கானாவின் பண்டி சஞ்சய் குமார்.
தெலுங்கானா முன்னாள் பா.ஜ., தலைவராக இருந்த இவரை, மீண்டும் இங்கு தலைவராக்க பா.ஜ., தயாராகிறது. இவர், ஆர்.எஸ்.எஸ்., பின்புலத்தை சார்ந்தவர். அடுத்த வாரம் பிரதமர் மோடி தெலுங்கானாவின் ஹைதராபாதிற்கு இன்று வருகிறார். நெடுஞ்சாலைகள், ரயில்வே, ஜவுளி என, 9,000 கோடி ரூபாய்க்கும் மேலான வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைக்க இருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் களத்தில் இப்போதே இறங்கி, பா.ஜ.,விற்கு சாதகமாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. எப்படியாவது தென் மாநிலங்களில் ஒன்றிலாவது ஆட்சியில் இருக்க வேண்டும் என்பது, பா.ஜ.,வின் ஆசை. நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan