ஈரானின் காசிம் துறைமுகம் மீது திடீர் தாக்குதல்
8 வைகாசி 2026 வெள்ளி 06:00 | பார்வைகள் : 1345
ஈரான் மீது போர் தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்த நிலையில் கடந்த கிழமையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம், ஈரானின் இராணுவ நிலைகளை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் அறிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்ற அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது ஈரான் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஏவுகணை, ட்ரோன் மற்றும் சிறிய படகுத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான USS Truxtun, USS Rafael Peralta மற்றும் USS Mason ஆகிய ஏவுகணை அழிப்புக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக ஓமான் வளைகுடாவை நோக்கிச் சென்றபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தற்காப்பு நடவடிக்கையாக ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் ஏவுதளங்கள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், உளவு மற்றும் கண்காணிப்பு நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் எந்தவொரு இராணுவ சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படவில்லை எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மோதலை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கம் அமெரிக்காவுக்கு இல்லை என்றும், தேவையானபட்சத்தில் தனது படைகளை பாதுகாக்கத் தயார் நிலையில் இருப்பதாகவும் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan