தொடரும் இஸ்ரேல் வீரரின் அத்துமீறல்கள்
7 வைகாசி 2026 வியாழன் 17:10 | பார்வைகள் : 1516
இஸ்ரேல் போர் நிறுத்தம் கடந்த ஏப்ரல் 17 அன்று வாஷிங்க்டனில் எட்டப்பட்டது. இருப்பினும் லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்த சூழலில் லெபனானில் நிலை கொண்டுள்ள இஸ்ரேல் படை வீரர்கள் லெபனானில் உள்ள பொதுமக்களின் சொத்துக்களை சேதப்படுத்துவதும், கொள்ளையடிப்பதும் தொடர்பான வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
வீரர்கள் தற்பெறுமைக்காக அவர்களே அதை வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர். அண்மையில் லெபனானின் தபெல் நகரில் இஸ்ரேல் ராணுவ சீருடையுடன் வீரர் ஒருவர் இயேசு கிறிஸ்து சிலையை அடித்து உடைத்த வீடியோ வைரலானது.
இந்நிலையில் அதே தபெல் நகரில் இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் கன்னி மரியாளின் சிலையை அவமதிக்கும் புகைப்படம் வெளியாகி சர்வதேச அளவில் கண்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு புகைப்படத்தில், இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் கன்னி மரியாள் சிலையின் வாயில் சிகரெட்டை வைத்து அவமதிப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
சம்பந்தப்பட்ட வீரர் அடையாளம் காணப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இஸ்ரேல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan