பாத்திமா சனா தலைமையில் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்
7 வைகாசி 2026 வியாழன் 12:15 | பார்வைகள் : 1280
ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.
பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கராச்சியில் நடந்தது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் 343 ஓட்டங்கள் குவித்தது. சதாப் ஷாமஸ் 101 ஓட்டங்களும், குல் ஃபெரோஸா 100 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்வே கிறிஸ்டின் முஸ்தபா, கெல்லி திரயா டக்அவுட் ஆகினர்.
கெலிஸ் 32 ஓட்டங்களும், பிலௌட் பிஸா 29 ஓட்டங்களும் எடுக்க ஏனைய வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
இதனால் ஜிம்பாப்வே அணி 39 ஓவர்களில் 137 ஓட்டங்களுக்கு சுருண்டது. கடைசிவரை களத்தில் நின்ற ரன்யாராரோ 33 ஓட்டங்கள் எடுத்தார்.
மிரட்டலாக பந்துவீசிய பாத்திமா சனா 15 ஓட்டங்களே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மோமினா, ரமீன், சைதா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan