இலங்கையில் மின்னல் தாக்கி யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
9 சித்திரை 2026 வியாழன் 14:21 | பார்வைகள் : 1454
வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல் தாக்கியதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டிற்கு அருகில் உள்ள சேனைப் பயிர்ச்செய்கை நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த தனது தாய் மற்றும் தந்தைக்கு, மழை காரணமாகக் குடையை வழங்கச் சென்றபோதே இந்த யுவதி துரதிஷ்டவசமான முறையில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
பெற்றோரை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவதற்காகச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் கென் ஹத பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சமோதி மல்ஷானி என்ற யுவதியே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan