அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கைது
9 சித்திரை 2026 வியாழன் 12:35 | பார்வைகள் : 1218
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான டேவிட் வார்னர் சிட்னியில் கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடி வரும் டேவிட் வார்னர் (David Warner), ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் உள்ள ஒரு சோதனை மையத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ஒரு வேனை ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது சோதனையில் தெரிய வந்தது.
தேசிய ஒளிபரப்பு நிறுவனமான ஏபிசி, அதிகாரிகள் வாகனத்தை அணுகி வார்னருக்கு சுவாசப் பரிசோதனை செய்ததாகவும், அதில் அவருக்கு Positive முடிவு வந்ததாகக் கூறியது.
அவர் கைது செய்யப்பட்டு உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவர் மிதமான அளவில் மது அருந்தி வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டார் என ஏபிசி மற்றும் பிற உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் மே 7ஆம் திகதி டேவிட் வார்னர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan