Paristamil Navigation Paristamil advert login

மத்திய கிழக்கில் புதிய பொற்காலம் மலரவுள்ளது - ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

மத்திய கிழக்கில் புதிய பொற்காலம் மலரவுள்ளது - ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

8 சித்திரை 2026 புதன் 15:17 | பார்வைகள் : 977


மத்திய கிழக்கில் புதிய பொற்காலம் மலரவுள்ளதாகவும், உலக அமைதிக்கான ஒரு மகத்தான தருணம் இதுவென்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் தற்போதைய பதற்றமான சூழலில் இருந்து விடுபட விரும்புவதாகவும், உலக நாடுகள் அனைத்தும் அமைதியையே எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளைக் குறைப்பதற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.

இதன் மூலம் பாரிய பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் எனத் தெரிவித்துள்ள அவர், ஈரான் தனது நாட்டின் மறுசீரமைப்புப் பணிகளை ஆரம்பிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சகல விதமான விநியோகப் பொருட்களுடன் அமெரிக்கா அங்கு நிலைபெற்றிருக்கும் எனவும், தற்போது அமெரிக்கா அனுபவித்து வரும் பொருளாதார செழிப்பைப் போன்றதொரு "பொற்காலம்" மத்திய கிழக்கிற்கும் உருவாகும் என தான் நம்புவதாகவும் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்