Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை தொடக்கம்: 100 டாலருக்கு கீழ் சரிந்த எண்ணெய் விலை!!

அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை தொடக்கம்: 100 டாலருக்கு கீழ் சரிந்த எண்ணெய் விலை!!

8 சித்திரை 2026 புதன் 07:48 | பார்வைகள் : 3153


அமேரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இடையே நிலவி வந்த பதற்றமானது ஏப்ரல் 8ஆம் தேதி இன்று அதிகாலை 14 நாட்கள் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளது. நீண்டகால மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், உலகளாவிய எரிபொருள் வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த முன்னேற்றத்தின் தாக்கமாக சர்வதேச எண்ணெய் சந்தையில் கணிசமான வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அமெரிக்க அதிபர் Donald Trump தனது இறுதி எச்சரிக்கையை ஒத்திவைத்ததுடன், ஈரான் தரப்பும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்தது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. 

இதன் விளைவாக, WTI மற்றும் Brent ஆகிய முக்கிய எண்ணெய் விலைகள் 15 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்து, பேரல் 100 டாலருக்கு கீழ் குறைந்தன. அதேவேளை, இஸ்லாமாபாத் நகரில் அமெரிக்கா–ஈரான் இடையிலான நேரடி பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் ஹார்முஸ் நீரிணை முழுமையாக திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும், சந்தை முழுமையாக சீராக வேண்டுமெனில் அந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்து இயல்பாக மீண்டும் தொடங்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

பிரான்சில் உடனடி எரிபொருள் விலை குறைப்பு சாத்தியமில்லை எனவும் மேலும் ஆயிரக்கணக்கான கப்பல்கள் அந்த வழியை கடக்க காத்திருக்கின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எழுத்துரு விளம்பரங்கள்