பிரபல நகைச்சுவையாளர் மீது 6 வயது சிறுவனை அடித்ததாக குற்றச்சாட்டு!!
8 ஐப்பசி 2025 புதன் 19:50 | பார்வைகள் : 4460
பிரபல நகைச்சுவையாளர் நவல் மதானி (Nawell Madani), 6 வயதுடைய (Djulian) ஜூலியன் என்ற சிறுவனை அடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பாரிஸ் நீதிமன்றம் விசாரணை தொடங்கியுள்ளது.
சம்பவம் திங்கட்கிழமை இரவு சாம்ஸ்-எலிசே பகுதியில் நடந்துள்ளது. குழந்தையின் தந்தை கூற்றுப்படி, அவரது மகன் மற்றும் மற்ற பிள்ளைகள் நடிகையைப் புகைப்படம் கேட்க நெருங்கியபோது, அவர் கோபமடைந்து, ஜூலியனை மார்பில் காலால் அடித்து தரையில் வீழ்த்தியுள்ளார். குழந்தை அவரது பையில் உள்ள நாயை தொட விரும்பியதாகவும் கூறப்படுகிறது.
நவல் மதானி போலீஸில் தன்னை நேரில் முறையிட்டு, "திருட்டு நடக்கும் என்ற பயத்தில்" குழந்தைக்கு அடித்ததாக விளக்கியுள்ளார். "15 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு எதிரான வன்முறை" என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சம்பவத்தை பார்த்த ஒருவர், நடிகை குழந்தையிடம் "இப்போது என்னை மரியாதை செய்" என்று கூறியதையும் தெரிவித்துள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan