Paristamil Navigation Paristamil advert login

ஓர் கவிதை

ஓர் கவிதை

19 ஆவணி 2025 செவ்வாய் 14:19 | பார்வைகள் : 3580


இனிய தமிழின் பறைச்சாற்றும் பெருமை – கவிதை

உள்ளத்தின் உணர்வுகளை வண்ணம் தீட்டுவது கவிதை

எதுகை மோனைகளை வீணையையாய் மீட்டுவது கவிதை

வாழ்க்கை நெறிகளை வரிகளாய் செதுக்குவது கவிதை

 

 

உடலை உறைய வைத்து உயிரை இரசிக்க செய்வது கவிதை

மண் வாசந்தனை செவிக்கும் உணர்த்துவது கவிதை

பிரம்மிக்கும் இயற்கையின் வற்றாத ஊற்று கவிதை

சொக்கும் விழியின் பக்குவம் அறிந்து

 

 

விக்கும் தொண்டையின் ஆர்வம் தெரிந்து

நடுங்கும் கரத்தின் நளினம் புரிந்து

சிவக்கும் கன்னத்தின் வெட்கம் சுவைத்து

வாடும் உதட்டை பதமாய் உழுது

பொங்கும் உள்ளத்தில் தங்கும் இந்த கவிதை