Paristamil Navigation Paristamil advert login

30 வருடங்களாக பெண் வயிற்றில் இருந்த சிசு - கல்லாக மாறிய அதிசய நிகழ்வு

30 வருடங்களாக பெண் வயிற்றில் இருந்த சிசு - கல்லாக மாறிய அதிசய நிகழ்வு

28 ஆனி 2025 சனி 12:53 | பார்வைகள் : 378


30 வருடங்களாக பெண் வயிற்றில் இருந்த சிசு, கால்சியம் கல்லாக மாறியுள்ளது.

அல்ஜீரியாவை சேர்ந்த 82 வயதான மூதாட்டி, வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற மருத்துவமனை சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் செய்யப்பட்டதில், அவரது வயிற்றில் இருந்த சிசு கல் போன்று மாறியிருப்பது தெரிய வந்தது.

30 வருடங்களுக்கு முன்னர், அவர் கர்ப்பமாக இருந்தபோது, வயிற்றில் இருந்த சிசு, 7 மாதங்களில் இறந்து விட்டது.

30 வருடங்களாக வயிற்றில் இருந்த அந்த இறந்த சிசு, கால்சியத்தால் சூழப்பட்டு கல்லாக மாறியுள்ளது. இது lithopedion என அழைக்கப்படுகிறது.

கர்ப்பப்பையில், கர்ப்பம் உருவாகாமல் வயிற்றில் கர்ப்பம் உருவாகும் போது இந்த lithopedion உண்டாகிறது.

கருவுக்கு போதுமான இரத்த விநியோகம் இல்லாமல் சிசு இறக்கும் போது, கருவை வெளியேற்ற உடலுக்கு எந்த வழியும் இல்லை.

உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம், உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இது போன்று கால்சியம் மூலம் கல்லாக மாற்றி விடுவதாக மருத்துவர் கிம் கார்சி தெரிவித்துள்ளார்.  

இது அரிதான ஒன்று என்றும், உலகத்தில் இதுவரை 300 நிகழ்வுகள் மட்டுமே இவ்வாறு நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்