Paristamil Navigation Paristamil advert login

எயார் பிரான்ஸ் - மேலும் இரு நாடுகளுக்கு விமான சேவைகள் இரத்து!!

எயார் பிரான்ஸ் - மேலும் இரு நாடுகளுக்கு விமான சேவைகள்  இரத்து!!

23 ஆனி 2025 திங்கள் 17:12 | பார்வைகள் : 1313


 

இஸ்ரேல் - ஈரான் யுத்தத்துக்கு இடையில் இரு நாடுகளுக்கும் விமான சேவைகளை இரத்துச் செய்த எயார் பிரான்ஸ், தற்போது மேலும் இரு நாடுகளுக்கும் விமான சேவைகளை இரத்துச் செய்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக எயார் பிரான்ஸ் அறிவித்துள்ளது. மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்படுவதாகவும், பயணிகள் விமான நிலையங்களை அல்லது எயார் பிரான்ஸ் முகவர்களை தொடர்புகொண்டு தகவல் பெறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து டோஹா, டுபாய் புறப்பட இருந்த விமானங்களை பிரிட்டிஷ் எயார்வேஸ் இரத்துச் செய்திருந்தது.

போர் பதட்டம் அதிகரித்ததன் காரணமாக மத்திய கிழக்கு வான்பரப்பை பயன்படுத்துவது ஆபத்தான ஒன்று என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்