பிரெஞ்சு நபருக்கு மலேசியாவில் மரண தண்டனை!!
22 ஆனி 2025 ஞாயிறு 18:09 | பார்வைகள் : 11588
போதைப்பொருள் கடத்தல் குற்றத்தில் கைது செய்யப்பட்டு - மலேசியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள பிரெஞ்சு நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Tom Felix எனும் 34 வயதுடைய பிரெஞ்சு நபர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். அவர் மலேசியாவின் வடமேற்கு தீவான Langkawi நகரில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். அவர் மலேசியாவுக்கு போதைப்பொருள் கடத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர், இம்மாதம் 16 ஆம் திகதி அவர் மலேசிய நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக அழைக்கப்பட்டார். பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனைக்கு எதிராக குற்றவாளி மேல் முறையீடு செய்யப்பட்டால் அவர் 104 வருடங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan