Paristamil Navigation Paristamil advert login

போருக்கு பின் பொதுவெளியில் தோன்றிய அயதுல்லா அலி கமேனி

போருக்கு பின் பொதுவெளியில் தோன்றிய அயதுல்லா அலி கமேனி

6 ஆடி 2025 ஞாயிறு 14:35 | பார்வைகள் : 455


ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி தலைமறைவாக இருப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் முதல் முறையாக பொதுவில் தோன்றினார்.

இஸ்ரேலுடனான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி, சனிக்கிழமை அன்று தெஹ்ரானில் நடந்த ஒரு பெரிய மத விழாவில் பங்கேற்றார்.

இது 12 நாள் வான்வழி மோதல் தொடங்கியதில் இருந்து கமேனி ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்கியிருப்பதாக பரவலான தகவல்கள் வந்தது.

இந்த நிலையில்தான் முதல் முறையாக அவர் பொதுவெளியில் தோன்றியுள்ளார்.

அவர் கூட்டத்தினரை நோக்கி கையசைத்து, கோஷம் எழுப்பிய மக்களை நோக்கி தலையாட்டியபடியும் சென்ற வீடியோக்களை ஈரானின் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்