மங்குஸ்தான் பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
3 ஆனி 2025 செவ்வாய் 17:21 | பார்வைகள் : 5085
மங்குஸ்தான் பழம் (Mangosteen) என்பது தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பழம். இது "பழங்களின் ராணி" என்று அழைக்கப்படுகிறது. மங்குஸ்தான் பழம் தமிழ்நாட்டில் மலைப் பிரதேசங்களில் அதிகமாக விளைகிறது. குறிப்பாக, குற்றாலம், கொடைக்கானல், நீலகிரி மாவட்டத்தின் பர்லியாறு, கல்லாறு போன்ற குளிர்ந்த பகுதிகளில் இது பயிரிடப்படுகிறது.மங்குஸ்தான் பழம் ஒரு தனித்துவமான சுவையைக் கொண்டது. மங்குஸ்தான் பழம் வெளிப்புறம் அடர் ஊதா நிறத்திலும், உள்ளே வெண்மையான, சுளைகள் கொண்ட சதையைக் கொண்டிருக்கும். இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகளின் கலவையாக இருக்கும்.
பொதுவாக, இந்தப் பழத்தைச் சாப்பிட்டவர்கள் அதன் சுவையை பீச், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி மற்றும் லிச்சி ஆகியவற்றின் கலவையாக கூறுகிறார்கள். சுவையைப் போல மிகுந்த மருத்துவ குணமும் இந்த பழத்திற்கு உண்டு. இந்த பழத்தில் உள்ள பொதுவான மருந்துவ குணங்களைப் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.
சத்துக்கள்: இது வைட்டமின் சி, பி1, பி2, நியாசின், ஃபோலேட் போன்ற வைட்டமின்களையும், பொட்டாசியம், இரும்புச்சத்து, மாங்கனீசு போன்ற தாதுக்களையும் கொண்டுள்ளது.மங்குஸ்தான் பழத்தில் சாந்தோன்கள் (Xanthones) எனப்படும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை புற்றுநோய் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டிருப்பதாக ஒரு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன.உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கும் பண்புகள் மங்குஸ்தான் பழத்தில் உள்ள சாந்தோன்களுக்கு உண்டு. இது கீல்வாதம், அழற்சி குடல் நோய் போன்ற நிலைகளில் நன்மை பயக்கும்.
உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது, மேலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan