Paristamil Navigation Paristamil advert login

அவதானம் பரிசில் வேகக்கட்டுப்பாடு!!

அவதானம் பரிசில் வேகக்கட்டுப்பாடு!!

19 ஆனி 2025 வியாழன் 20:24 | பார்வைகள் : 2135


ஓசோன் மாசுபாடு காரணமாக நாளை ஜூன் 20, வெள்ளிக்கிழமை பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் உள்ள வழக்கமான அதிகபட்ச வேகத்தில் இருந்து 20 கி.மீ வேகம் குறைக்கப்பட உள்ளது. உதாரணத்துக்கு 110 கி.மீ வேகம் உள்ள சாலையில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் மட்டுமே பயணிக்க முடியும். ஏற்கனவே 50 கி.மீ வேகத்துக்கு கீழ் உள்ள சாலைகளுக்கு இது பொருந்தாது.

பரிசில் வெப்பம் காரணமாக அதிக மாசடைவு பதிவாகியுள்ளது. இதனால் சுவாசப்பிரச்சனை, எளிதில் நோய்த்தொற்றுக்கு உள்ளாகுபவர்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்