Paristamil Navigation Paristamil advert login

சுவிட்சர்லாந்தில் நிலச்சரிவு அபாயம்...

சுவிட்சர்லாந்தில் நிலச்சரிவு அபாயம்...

17 ஆனி 2025 செவ்வாய் 13:13 | பார்வைகள் : 6290


நிலச்சரிவு அபாயம் காரணமாக சுவிஸ் கிராமம் ஒன்று மீண்டும் காலி செய்யப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர பனிப்பாறைச்சரிவில், Blatten என்னும் கிராமமே கிட்டத்தட்ட மண்ணில் புதைந்தது நினைவிருக்கலாம்.

அதேபோல, இரண்டு ஆண்டுகளுக்கு முன் Graubünden மாகாணத்திலுள்ள Brienz என்னும் கிராமத்தில் பாறைகள் உடைந்து உருண்டு வரும் அபாயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அக்கிராம மக்கள் வீடுகளை காலி செய்ய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சமீபத்தில் அக்கிராம மக்கள் தங்கள் விடுகளுக்குத் திரும்ப அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நேற்று மீண்டும் அக்கிராம மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சுமார் அரை மில்லியன் கியூபிக் மீற்றர்கள் அளவிலான பிரம்மாண்ட பாறைகள் உருண்டு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாலேயே அக்கிராம மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026